ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு எந்தன் அன்பை நீ அவளிடம் சேரு
ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு எந்தன் அன்பை நீ அவளிடம் சேரு எங்கே என் பிள்ளை ஏங்கும் என் அன்னை விழியோரம் மொழியாலே வருடு எங்கேயும் இல்லை இங்கே தான் என்று நான் வாழ்ந்த மண்ணை நீ காட்டு எந்த நாளும் கேக்கும் என் பாட்டு
ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு எந்தன் அன்பை நீ அவளிடம் சேரு
தோளோடு என்னை சாய்த்து தாலாட்டும் போது அன்புக்கு அர்த்தங்கள் அவள் கொடுத்தால் தாய் அன்பில் தானே தாயகத்தை அறிந்தேன் தாயகா தாயகத்தை உணர்ந்தேன் என் தாயை நானும் பிரிந்தாலும் கூட அவள் நினைவு என்றென்றும் அழியாதது நிலவே நீ செல்லு என் தாய் முன் நில்லு என் வீரம் அவளுக்கு சொல்லு நீ என் தாயின் சோகத்தை வெல்லு
ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு
நிலவே என் முகமும் என் தாயின் மனமும் களங்கமே இல்லாத பேர் அழகே நினைவினில் நிறையும் தலைவனின் அருகில் வளந்த எம் வாழ்க்கையும் அழகே அனுராதபுரத்தில் அதிர்கின்ற விதத்தில் அனலாக எழுந்தது என் வீரம் அதை பார்த்த நிலவே என் அன்பு உறவே அன்னையிடம் என் கதையை சேரு என் ஆசை நிறைவேறியதை கூறு
ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு எந்தன் அன்பை நீ அவளிடம் சேரு எங்கே என் பிள்ளை ஏங்கும் என் அன்னை விழியோரம் மொழியாலே வருடு எங்கேயும் இல்லை இங்கே தான் என்று நான் வாழ்ந்த மண்ணை நீ காட்டு எந்த நாளும் கேக்கும் என் பாட்டு ஆகாய வெளியில் அழகான நிலவே அன்பனா அன்னை முகம் பாரு அவள் சிந்தும் கண்ணீர் என் மனதை சுடுதே ஆறுதலை அன்னையிடம் கூறு எந்தன் அன்பை நீ அவளிடம் சேரு
