கல்லறைகள் விடை திறக்கும் | Eelam Song Lyrics - EELAM MUSIC

கல்லறைகள் விடை திறக்கும் | Eelam Song Lyrics

 கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு

பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும்

அருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும் விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம்

பூவெல்லாம் உங்க‌ளுக்கான‌து
இந்த‌ புல்வெளி உங்க‌ளுக்கான‌து மேக‌மே உங்க‌ளுக்கான‌து ம‌ழை முத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து தேச‌மே உங்க‌ளுக்கான‌து எங்க‌ள் பூஜைக‌ள் உங்க‌ளுக்கான‌து வாயிரின் துதிரும் வார்த்தைக‌ள் முழுதும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து மா வீர‌ர்க‌ளே உங்களுக்கான‌து

கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

கார்த்திகை உங்க‌ளுக்கான‌து விடி காலைக‌ள் உங்க‌ளுக்கான‌து போர்க் கள‌ம் உங்க‌ளுக்கான‌து கோடி புன்னிய‌ம் உங்க‌ளுக்கான‌து பூத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து எந்த‌ சாவிலும் உங்க‌ளுக்கான‌து பார்த்திடும் க‌ட‌லும் ஆலைய‌ ம‌னியும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து

கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

க‌ண்ணில் தெரியும் மான‌ம் முழுதும் கைக‌லில் வ‌ந்து சேரும் மாவீர‌ர்க‌ள் உற‌ங்கும் கல்ல‌றை மீது விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும்