சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா | Eelam Songs Lyrics - EELAM MUSIC

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா | Eelam Songs Lyrics

 சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

விழியில் நெருப்பு ஏந்தி

நீ வெளியில் வருக நிந்தி

விழியில் நெருப்பு ஏந்தி

நீ வெளியில் வருக நிந்தி

வழியில் உள்ள தடைகள் யாவும்

எரிய வருக தாண்டி

வழியில் உள்ள தடைகள் யாவும்

எரிய வருக தாண்டி

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

பேரம் பேசி உண்னை விற்கும் கோரம்

இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்

பேரம் பேசி உண்னை விற்கும் கோரம்

இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்

தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்

தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்

இந்தத் தடைகள் யாவும் உடைய எழுந்து வாரும்

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு

பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு

புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு

பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு

குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு

குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு

உன் குரல்கள் உலக முகடை உடைக்க பாடு

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா

ஆயுதங்கள் எடுத்து நிக்கும் புலிகள்

இவர் அண்ணன் பிரபாகரனின் பயிர்கள்

ஆயுதங்கள் எடுத்து நிக்கும் புலிகள்

இவர் அண்ணன் பிரபாகரனின் பயிர்கள்

ஓயுதங்கள் இனி உனக்கு இல்லை

ஓயுதங்கள் இனி உனக்கு இல்லை

இதை உனந்து கொண்டால் இல்லை உனக்கு தொல்லை

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா

தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா

சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா சிறைகளா