மண்ணில் விளைந்த முத்துக்களே | Eelam Songs Hariharan - EELAM MUSIC

மண்ணில் விளைந்த முத்துக்களே | Eelam Songs Hariharan

 மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சந்தனப் பேழையிலே

உறங்கிடும் தோழனே

எனக்குன் துணிவைத் தா

எனக்குன் புடவை தா

அண்ணன் தம்பி ஆகி விட்டோம்

அப்பு ஆச்சி ஆசிப் பட்டோம்

ஆயுதங்கள் ஏந்தி விட்டோம்

ஆனவரை பார்த்திடுவோம்

காலம் வரட்டும் காத்திருப்போம்

காதில் சங்கொலி கேட்டிருப்போம்

போ.. வந்தால் போர் தொடுப்போம்

சாதல் என்றால் பேர் கொடுப்போம்

இனி நாளை நாம்தான் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

சிறைகளில் இருந்ததும்

தலைகளை இழந்ததும்

விடுதலை அடையவே

நினைத்தது நடக்கவே

உங்கள் அடிச்சுவட்டிலே

எங்கள் வழி இருக்குது

எதிரிகள் தெரியுது

எண்ணங்கள் புரியுது

தீரம் என்றென்றும் ஒய்வதில்லை

வெற்றி என்பது தூரமில்லை

நாளை என்பது நம் கையிலே

நாடு என்றென்றும் நம் கண்ணிலே

புது வாழவே காண்போம் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே

மரணம் ஏதடா

கண்ணில் விழுந்த இரத்தத்திலே

கவிதை பாடடா

இதயம் முழுதும் அழுவதால்

விழியில் நீரடா

விழையும் பயிர்கள் அழிவதால்

மனதில் நோயடா

விந்தைதானடா