நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍| Eelam Song Lyrics - EELAM MUSIC

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍| Eelam Song Lyrics

 நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா ‍‍‍‍‍‍‍‍‍‍‍

இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா

தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம் உந்தன்

தாய்நிலத்தில் உனக்கு ஒரு பந்தமில்லையாம் அழுவதன்றி உனக்கு

வேறு மொழியுமில்லையாம் இன்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையாம்

அகதி யாகியே தெருவினோரமாய் திரிவதேனடா

அடிமைமாடுகள் போல இன்று நீ அலைவதேனடா

இன்னும் விழிகள் மூடி அமைதியாகப் படுப்பதேனடா

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா

அப்புகாமியை ஆளயிங்க்கு விட்டதாரடா

இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா

இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா

புதிய வாழ்வதை எழுத நீயுமே களத்திலாடடா

புலிகள் சேனையோ டெழுந்து நின்றுமே தடைகள் மீறடா

தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா