இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்
இவர் வெளியாலே தெரியாத வேர்கள்
இது காலவரனும் பலநூறு முகவர்
இவரோடு படகில் பலவேறு வகைகள்
சிறைவாடுவோரும் திரை முடுவோரும்
உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்
இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
வெளியே இவர்கள் தெரியாவண்ணம் திரிவார்கள்
நாளை விடியும் போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்
பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்
பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்
எங்கள் பலமே இவரின் பலமென்றாகி விடுவார்கள்
இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
குஞ்சுகள் தன்னை கூட்டி சென்று சேர்ப்பார்கள்
எங்கள் கூட்டுக்குள்ளும் குஞ்சினை வைத்து காப்பார்கள்
வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்
வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்
இவர்கள் வதையுறும் போதும் இரகசியம் தன்னை காப்பர்கள்
இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
தமிழரின் தாகம் இவர்களிடம் சொல்லி போவார்கள்
எங்கள் முகவர்கள் என்றும் மனம்தளராமல் சிரிப்பார்கள்
விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்
விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்
பெரு வெற்றியின் பின்னே இவர்களும் பெரிதா இருப்பார்கள்
இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்
இவர் வெளியாலே தெரியாத வேர்கள்
இது காலவரனும் பலநூறு முகவர்
இவரோடு படகில் பலவேறு வகைகள்
சிறைவாடுவோரும் திரை முடுவோரும்
உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்
இருளுக்குள் எரிகின்ற தீபம்
இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்
விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்
இவர் வெளியாலே தெரியாத வேர்கள்
விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்
இவர் வெளியாலே தெரியாத வேர்கள்
