காற்றுக்கும் நாங்கள் சொந்தம் | Eelam Song Lyrics - EELAM MUSIC

காற்றுக்கும் நாங்கள் சொந்தம் | Eelam Song Lyrics

 காற்றுக்கும் நாங்கள் சொந்தம்

கடலுக்கும் நாங்கள் சொந்தம்

எங்கள் தேச வானும் சொந்தமே…

பூக்கின்ற பூக்கள் சொந்தம்

பொழிகின்ற மழையும் சொந்தம்

எங்கள் மண்ணும் எங்கள் சொந்தமே…

மண் மீது கொண்ட பாசம்

உணர்வோடு நின்று பேசும்

தமிழ்ழீழம் எங்கள் தேசம் தேசமே…

மாவீரம் நெஞ்சை ஆழும்

மகிழ்வோடு தாயகம் மீளும்

தமிழ்ழீழம் என்றும் வாழும் வாழ்கவ

(காற்றுக்கு)

துணிவு நெஞ்சில் உண்டு

கருவி கையில் உண்டு

கைவீசி நாங்கள் நடக்கிறோம்

துயரம் வந்து சூட

துரோகம் எம்மில் விழ

உயிர் வீசி அதை நாங்கள் கடக்கிறோம்

எங்கள் வாழ்வின் வாசலை காணவே

எங்கள் கால்கள் களமுனை போகுதே

உள்ளம் புரட்சி தீயிலே வேகுதே

எங்கள் உணர்வுகள் விரையும் விரையும் பயணங்கள் தொடரும

(காற்றுக்கு)

கொட்டும் மழையில் நின்று

கொடிய இரவில் நின்று

எம் தேசத்தை நாங்கள் காக்கிறோம்

குருதி மண்ணில் பூசி

உயிரை நாங்கள் வீசி

எம் தேசத்தை நாங்கள் மீட்கிறோம்

அன்னை தந்தை உறவுகள் பிரிவிலே

அன்பின் அர்த்தங்கள் அண்ணன் உறவிலே

அவன் கொள்கை எங்கள் உயிரிலே

எங்கள் உறுதியால் ஈழம் விடியும் தேசியாம் வாழும்