ஆடும் அலை ஏறிவந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு ஆடும் அலை ஏறிவந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு வந்த கப்பல் வந்து சேரலையே அந்த வல்லரசு இன்னும் ஆறலையே வந்த கப்பல் வந்து சேரலையே அந்த வல்லரசு இன்னும் ஆறலையே
ஆடும் அலை ஏறி வந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு
வருகின்ற திசை எங்கும் வழி பார்த்து விழிபூத்து வாசலில் கோலம் இட்டோம் அவர் தேருமேனி நெருப்பாகி எரிகின்றதெனக் கேட்டு உயிர்வாட ஓலம் இட்டோம் தீயாகி எரிந்திட்ட நெஞ்சங்களே வந்து தாய் மண்ணின் கரை மீது கொஞ்சுங்களேன் ஆடும் அலை ஏறி வந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு
தண்ணீரில் குளிக்கின்ற தேசத்தை பாசத்தில் காணவா ஓடி வந்தீர் கிட்டு அண்ணனே உன் வீரர் கதையாவென் பாட்டிலே வீசவா போய் முடிந்தீர் கடல் மீது குடம் இட்ட தங்கங்களே இனி கண் காண முடியாத சொந்தங்களே ஆடும் அலை ஏறி வந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு
தர்மத்தின் தாய் வீடு எனநம்பி நினைத்திட்ட தமிழர்களுக்கு தீ மூட்டினாய் ஹிந்தி அமர்வத்தின் உருவத்தில் வந்து எங்கள் வீரர்கள் உயிர் தின்று அழிவூட்டினான் உலகத்தின் திசை எங்கும் புயல் ஆனது எங்கள் உரிமைக்கு இது தானே உரம் ஆனது
ஆடும் அலை ஏறிவந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு ஆடும் அலை ஏறிவந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு வந்த கப்பல் வந்து சேரலையே அந்த வல்லரசு இன்னும் ஆறலையே வந்த கப்பல் வந்து சேரலையே அந்த வல்லரசு இன்னும் மாறலையே ஆடும் அலை ஏறிவந்தது யாரு கிட்டு அண்ணன் என்ற ஊர் அறிந்த ஆளு
