மாங்கிளியும் மரங்கொத்தியும் | Eelam Song Lyrics - EELAM MUSIC

மாங்கிளியும் மரங்கொத்தியும் | Eelam Song Lyrics

 மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை

நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.

சிங்களவன் படை வானில்

நெருப்பை அள்ளிச் சொரியுது

எங்களுயிர் தமிழீழம்

சுடுகாடாய் எரியுது

தாய் கதற பிள்ளைகளின்

நெஞ்சுகளைக் கிழிக்கிறான்

காயாகும் முன்னே இளம்

பிஞ்சுகளை அழிக்கிறான்.

பெத்தவங்க ஊரில

ஏங்குறாங்க பாசத்தில

எத்தனை நாள் காத்திருப்போம்

அடுத்தவன் தேசத்தில

உண்ணவும் முடியுதில்லை

உறங்கவும் முடியுதில்லை

எண்ணவும் முடியுதில்லை

இன்னுந்தான் விடியுதில்லை

கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள்

விளையாடும் தெருவில

கட்டிவச்சுச் சுடுகிறானாம்

யார் மனசும் உருகல

ஊர்க்கடிதம் படிக்கையில

விம்மி நெஞ்சு வெடிக்குது

போர்ப்புலிகள் பக்கத்தில

போக மனம் துடிக்குது