ராஜ கோபுரம் எங்கள் தலைவன் | Eelam Song Lyrics - EELAM MUSIC

ராஜ கோபுரம் எங்கள் தலைவன் | Eelam Song Lyrics

 ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு

ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)

கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே

கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)

குளிரான இளம் காலை என நினைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே

தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)