இது தாண்டா கடைசி அடி
எதிரி கதையை இன்றே முடி
பிடியடா தம்பி ஒரு பிடி
பிறக்கும் தமிழீழம் பறக்கும் புலிக்கொடி (இதுதாண்டா)
வலிமை உடைய படை புலிகள் படைதாண்டா
வாடா பகைவனை நொருக்குவோம்
கொலைஞர் படை சிதற தலைகள் விழ வாடா
கொடியர் உடல் தேடிப் பொறுக்குவோம் (இதுதாண்டா)
சீறு புயலாகி வீறு கொண் எழடா
சிங்களம் அதிர தாக்கடா
நூறு படை வரலாம் நூறு தடை வரலாம்
நொடியில் பகை தூள் தூள் ஆக்கடா (இதுதாண்டா)
உரிமை இழப்போமா தமிழர் உயிர் ஈழம்
ஒருபோதும் ஒடுங்கிக் கிடக்காது
நரிகள் விளையாட்டு புலிகள் தமிழ் மண்ணில்
நடக்குமா இங்கு நடக்காது (இதுதாண்டா)
அடியடா ஓங்கி அடியடா - நமது
அன்னை மண் உயிரில் மேலன்றோ
இடியும் எடி எழடா விடியல் எழ எழடா
வெற்றித் தோழ் தமிழன் தோளன்றோ
