கரும்புலிகள் என நாங்கள் | Eelam Song Lyrics - EELAM MUSIC

கரும்புலிகள் என நாங்கள் | Eelam Song Lyrics

 கரும்புலிகள் என நாங்கள்

மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம்
கலங்கிடும் வெல்வோம்!

கரும்புலிகள் என நாங்கள் .....

கடலினில் சிங்கள
படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின்
பாசறை முடிப்போம்..

கரும்புலிகள் என நாங்கள் .....

அம்மாவும் அப்பாவும்
எங்களுக்கு உண்டு
ஆனாலும் மண் மீது
பெரும் பாசம் உண்டு
ஆறடி மண் கூட
எமக்காக கேளோம்!
தமிழ் தாயின் துயர் தீர்க்க
மகிழ்வோடு சாவோம்!

கரும்புலிகள் என நாங்கள் .....

சாவினை தோள்மீது
நாங்கள் சுமப்போம்
சாவுக்கும் அஞ்சாமல்
சாவுக்குள் வாழ்வோம்
தமிழரின் சாவுகள்
வரலாறு படைக்கும்
தமிழீழ தாய் அவள்
விலங்குகள் உடைக்கும்

கரும்புலிகள் என நாங்கள் .....

ஊர் அதில் வெடி ஓசை
வான் வரை கேக்கும்
உலகத்தின் திசை எங்கும்
எம் செய்தி தாக்கும்
காற்றாக்கி எம்முடல்
நீர் ஆக்கி கரையும்
தமிழர் தம் உனர்வோடு
எம் உயிர் கலக்கும்

கரும்புலிகள் என நாங்கள் .....

கடலினில் சிங்கள
படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின்
பாசறை முடிப்போம்..