கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லா | Eelam Song Lyrics - EELAM MUSIC

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லா | Eelam Song Lyrics

 கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்

காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை

நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்

காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்

ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்