ஊர்கோலம் போகின்ற மேகங்களே | Eelam Song Lyrics - EELAM MUSIC

ஊர்கோலம் போகின்ற மேகங்களே | Eelam Song Lyrics

 ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

கண்ணில் நீர்க்கோலம் ஆகின்ற நெஞ்சங்களே

நெருப்பாகி வாருங்களே நெருப்பாகி வாருங்களே

கருவேங்கை வெடியாகிப் போகின்ற நேரம்

காற்றிற்கும் விழியோரம் கசிகின்ற ஈரம்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

இமைமூடும் நேரத்தில் வெடியாகினார்

இதழோரம் சிரிப்போடு விழி மூடினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அமைகின்ற தமிழீழ உயிராகினார்

அழியாத வரலாறு உருவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

தெரியாத முகமாக நடமாடினார்

தெளிவான உணர்வோடு படமாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வரிவேங்கை கருவேங்கை எனவாகினார்

வெடியாகி தமிழீழ விடிவாகினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே

நடமாடும் தெய்வங்கள் இவராகினார்

நமதீழத் திருநாட்டின் கருவாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பகைவீழும் படியாக புயலாகினார்

பலகோடி ஜென்மங்கள் குடியேறினார்

ஊர்கோலம் போகின்ற மேகங்களே ஒரு வார்த்தை பேசுங்களே