ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள்
ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள்
பூரண விடுதலை பெற்றிடுவோம் - நாம்
போரினில் பகைவனை வென்றிடுவோம்
பூரண விடுதலை பெற்றிடுவோம் - நாம்
போரினில் பகைவனை வென்றிடுவோம்
தணியாத தாகம் தமிழீழமடா – அதில்
பணியாத தலைவனை பெற்றுவிட்டோம்
ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)
பார்வைக்கு அவன் முகம் பசுமையடா தம்பி
பாய்ந்திட்டால் வேங்கையின் தலைவனடா
பார்வைக்கு அவன் முகம் பசுமையடா தம்பி
பாய்ந்திட்டால் வேங்கையின் தலைவனடா
வீழ்ந்திட்ட எம் இனம் தலை நிமிர – புலி கொடியின்
கீழ் படைதனை ஒன்றிணைத்தார் ஒன்றிணைத்தார்
ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)
கடல் சூழ்ந்திட்ட தீவினில் சுதந்திரம் மீட்டிட
உக்கிர போர் நடத்தும் பெருந்தலைவர்
கடல் சூழ்ந்திட்ட தீவினில் சுதந்திரம் மீட்டிட
உக்கிர போர் நடத்தும் பெருந்தலைவர்
ஈழமக்கள் மனம் நிறைந்திட்டவன் – பிரபா
உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு ஒளிவிளக்கு
ஈழத்துக்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள் (2)