மேகம் வந்து கீழிறங்கி முத்தம் | Megam Vanthu | Eelam Song Lyrics & MP3 - EELAM MUSIC

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் | Megam Vanthu | Eelam Song Lyrics & MP3

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்

சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்
தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்
கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை
கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று

கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன
மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும்
காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து
நாயகரின் கல்லறைகள் மீது

மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்

நன்றி: தமிழினி.
<